பெருமாள் கோவிலில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌந்தரராஜா பெருமாள் கோவிலில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா;

கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பல்வேறு அமைப்புகள் பொதுமக்களின் தாகம் தணிக்கும் பொருட்டு நீர் மோர் பந்தல் அமைத்து வருகின்றன. அதன் அடிப்படையில் இன்று திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் திருக்கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாகம் தணிக்க நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இளநீர், தர்பூசணி, தண்ணீர், மோர் உள்ளிட்ட பழ வகைகள் நீர் மோர் பந்தலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவர்.. விக்னேஷ்பாலாஜி, அறங்காவலர்கள், இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர்கள், செயல் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.