கால்நடைகளுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

அனல் காற்று வீசும் காலங்களில் கால்நடைகளை பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் - மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தகவல்.;

Update: 2025-04-08 13:49 GMT
கால்நடைகளுக்கு பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
  • whatsapp icon
கோடைகாலத்தில் கால்நடைகளை பாதுகாக்க தகுந்த பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடித்து பாதுகாத்துக்கொள்ளலாம். அனல் காற்று வீசும் காலங்களில் கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும், கால்நடைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் மற்றும் தீவனம் கொடுக்க வேண்டும், கால்நடை தீவனங்களை வெட்ட வெளியில் போட வேண்டாம், அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம், பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும். செல்லப் பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச் செல்லக் கூடாது. வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நண்பகல் நேரங்களில் மாடுகளுக்கு வெப்பத்தினால் அயர்ச்சி ஏற்படா வண்ணம் அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். நீர் தெளிப்பான் கொண்டு கோழிகளின் மீது நீர் தெளிக்க வேண்டும். மேலும் கோழி கொட்டகைகளின் சன்னல்களில் ஈரத்துணி கொண்டு மூடுவதால் கோழிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் குறைக்கலாம். கோடைகாலத்தில் இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள மேற்கொண்டு விவசாயிகள் தங்கள் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News