மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
அரியலூர், ஏப்.8- அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து பெறப்பட்ட 441 கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். முன்னதாக அவர், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 3 பேருக்கு காதொலி கருவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகள் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையும். 1 முதியோர் குழுவுக்கு ஆதார நிதியாக ரூ.15,000}க்கான காசோலையும், சுய உதவிக்குழு உறுப்பினர் (இறந்தவர்) காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்துக்கான காசோலையும் என மொத்தம் ரூ.4.15 லட்சம் மதிப்பிலான காசோலையினை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.