வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-08 14:46 GMT
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டதாக வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி மையம் மாவட்ட செயலாளர் கணேசன், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல் ஆகியோர் தலைமை வகித்தனர். விசிக மேலிடப் பொறுப்பாளர் கலைவேந்தன் கண்டன உரையாற்றினார். மண்டல செயலாளர் முரசு தமிழப்பன் ஒருங்கிணைத்தார். இதில் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News