கரூர்- வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளி விழா ஆண்டு பங்குனி மாத திருவிழா கரகம் ஆலயம் வந்தடைந்தது.

கரூர்- வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளி விழா ஆண்டு பங்குனி மாத திருவிழா கரகம் ஆலயம் வந்தடைந்தது.;

Update: 2025-04-08 14:59 GMT
  • whatsapp icon
கரூர்- வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளி விழா ஆண்டு பங்குனி மாத திருவிழா கரகம் ஆலயம் வந்தடைந்தது. கரூர் நகரப் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் வெள்ளிவிழா ஆண்டை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமத்துடன் பங்குனி மாத திருவிழா தொடங்கியது. அதைத் தொடர்ந்து திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று இரவு அமராவதி ஆற்றில் இருந்து வேம்பு மாரியம்மன் கரகம் பாலிக்கப்பட்டு மேள தாளங்கள், வானவேடிக்கையுடன் ஆலயத்தின் பூசாரி வேம்பு மாரியம்மன் கரகத்தை தலையில் சுமந்தவாறு அமராவதி ஆற்றில் இருந்து முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு ஆலயம் வந்தடைந்தார். ஆலயம் அந்த வேம்பு மாரியம்மன் கரகத்திற்கு மகா தீபாராதனை காட்டி தொடர்ச்சியாக அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. கரூர் நகரப் பகுதியில் உள்ள வேம்பு மாரியம்மன் வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற கரகம் ஆற்றில் இருந்து கோவிலுக்கு வரும் நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து ஓம் சக்தி பராசக்தி கோஷத்துடன் சுவாமியை மனம் உருகி வழிபட்டனர்.

Similar News