நீலகிரி குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதிக்கு குடிநீர் ஒரு வார காலமாக விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி........

தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை;

Update: 2025-04-08 15:31 GMT
  • whatsapp icon
நீலகிரி குன்னூர் அருகே உள்ள கொலக்கம்பை பகுதிக்கு குடிநீர் ஒரு வார காலமாக விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி........ நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேலூர் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள கொலக்கம்பை பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் காவல் நிலையம் வங்கி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது இந்நிலையில் துண்டநெறி பகுதியில் இருந்து குடிநீர் குழாய் மூலம் கொலக்கம்பை பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது இந்நிலையில் தூதூர்மட்டம் தூரி பாலம் ஓடையில் குடிநீர் குழாய் உடைந்துள்ளதால் குடிநீர் வீணாகி வருகிறது குடிநீர் குழாயை சரி செய்ய ஊராட்சி ஊழியர்கள் சென்று பார்த்த பொழுது கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுவதாக கூறி குடிநீர் குழாய் சரி செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர் இது குறித்து ஊழியர்கள் சுகாதார ஆய்வாளரிடம் கூறிய பொழுது அலட்சியமாக பதில் அளித்ததாக ஊழியர்கள் கூறுகின்றனர் எனவே நீரோடையில் கோழி கழிவுகளை கொட்டும் இறைச்சி கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உடைந்து போன குடிநீர் குழாய் சரி செய்யப்பட்டு கொலக்கம்பை பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Similar News