உதகையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகம்;

Update: 2025-04-08 15:44 GMT
உதகையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
  • whatsapp icon
உதகையில் திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம். உச்சநீதிமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை மாநில ஆளுநருக்கு எதிராக பெற்று தமிழ்நாட்டில் சமூக நீதியினை நிலைநாட்டி உள்ளதை கொண்டாடும் வகையில், உதகை ஏ.டி.சி பேருந்து நிலையத்தில் உதகை நகர செயலாளர் ஜார்ஜ் ஏற்பாட்டில், மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட அவை தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, பொதுக்குழு உறுப்பினர் மோகன்குமார், உதகை நகரமன்ற தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக "தமிழ்நாடு போராடும்-தமிழ்நாடு வெல்லும்" என கோஷமிட்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர்கள் ராஜா, எல்கில் ரவி, மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் நாகராஜ், மஞ்சுநாத், சசிகுமார், உதகை நகர துணை செயலாளர் கிருஷ்ணன், நகரமன்ற உறுப்பினர் விஷ்ணு, கழக நிர்வாகிகள் செல்வம், சுரேஷ், உமேஷ், வாசுதேவன், நிக்கோலஸ், ஸ்டீபன், கமல், செந்தில், சிவகுமார், சம்பத், செல்வராஜ் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Similar News