தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினை ஆட்சியர் ஆய்வு!
வேலூரில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினை ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் வே.இராஜசுப்புலெட்சுமி இன்று (08.04.2025) வேலூர் மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு எண் 37, பில்டர் பெட் மற்றும் விநாயகபுரம் பகுதியில் 3.25 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 3 வது மண்டலக்குழுத்தலைவர் யூசுப்கான், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் உடன் இருந்தனர்.