பொது இடத்தில் மது குடித்த நான்கு பேர் கைது

ஊதியூர் அருகே பொது இடத்தில் மது குடித்ததாக 4 பேர் கைது;

Update: 2025-04-09 00:01 GMT
ஊதியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள சாலைகள், பஸ் நிலையம், சந்தை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுப்பிரியர்கள் மது அருந்தி வருவதாகவும், இரவு நேரத்தில் அரசு அலுவலக வளாகத்தில் புகுந்து அசுத்தம் செய்து வருகின்றனர் என புகார் எழுந்தன. இதையடுத்து ஊதியூர் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் பொது இடங்களில் மது குடித்ததாக கவுண்டம்பாளையம் காலனி தர்மராஜ் (வயது 23), குங்காருபாளையம் சந்தோஷ் (22), நிழலி காஞ்சிபுரம் சக்திவேல் (47), பெருமாள்பாளையம் சக்திவேல் (45) ஆகிய 4 பேரை கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Similar News