பர்கூர் அருகேஸடூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

பர்கூர் அருகே டூவீலர் கவிழ்ந்து தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.;

Update: 2025-04-09 00:16 GMT
கிருஷ்ணகிரி அருகே உள்ள சுண்டேகுப்பத்தை சேர்ந்தவர் சதீஷ்(23) தனியார் நிறுவன ஊழியரான. இவர் நேற்று முன் தினம் கிருஷ்ணகிரி ராசு வீதியை சேர்ந்த தோழி பிரீத்தி (20) என்பவருடன் டூ வீலரில் சென்ற போது பர்கூர் அருகே உள்ள பூமலை நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து டூவீலர் நிலைத் டுமாறி கவிழ்ந்தது இந்த விபத்தில் சதீஷ் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பிரீத்தி படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் உடலை மீட்டனர். பின்னர் படுகாயம் அடைந்த பிரீத்தியை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News