தாராபுரம் தனியார் பள்ளி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா
ஸ்ரீ அரோபிந்தோ வித்யாலயா பள்ளி சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா;
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்காக தாராபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அரோபிந்தோ வித்யாலயா பள்ளி சார்பில் பள்ளி முன்பு நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் ஸ்ரீ அரோபிந்தோ வித்யாலயா பள்ளியின் தாளாளர் வினிதா கோவிந்தசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு கம்மங்கூழ், மோர் வழங்கினார்.