தளி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள்.

தளி அருகே வாழைத்தோட்டத்தில் புகுந்து யானைகள்.;

Update: 2025-04-09 02:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே கும்ளாபுரம் வனத்திலிருந்து வெளியேறிய, 3 யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. நேற்று முன்தினம் இரவு ஆருப்பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி முனிரெட்டி என்பவரது வாழை தோட்டத்தில் வாழை மரங்களை நாசம் செய்தன. இதே போல், சதீஷ்ரெட்டி இவரது வெள்ளரி தோட்டம், நாராயணரெட்டி என்பவரது தோட்டத்தில் பறித்து வைக்கபட்டிருந்த சுரைக்காய்களை காட்டு யானைகள் தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்தன. நேற்று யானைகள் நடமாட்டம் குறித்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாலும், கண்டுகொள்வதில்லை என, விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

Similar News