ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த நபரை தர்மபுரி நகர காவலர்கள் கைது செய்தனர்;

Update: 2025-04-09 02:04 GMT
ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றவர் கைது
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே பூதநத்தம் பகுதியை சேர்ந்தவர் அருள் முருகன் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர் முகாமில் மனு அளிக்க வந்த போது, மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் கூறுகையில், 'எனக்கு சாலை விபத்தில் காலில் அடிப்பட்ட நிலையில், ஒரு வழக்கறிஞர் மூலம் ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இதனால் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் 13.83 லட்சம் வந்தது. இதை அந்த வழக்கறிஞர், எனது பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி, பணத்தை அபகரித்து கொண்டார். தற்போது மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இருக் கிறேன். எனவே வேறுவழி தெரியாமல் தீக்குளிக்க முயன்றேன். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரவேண் டும் என்றார். இதையடுத்து காவலர்கள் நேற்று மாலை தர்மபுரி நகர காவல் நிலையத்தில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News