ராமநாதபுரம் பங்குனி திருவிழா விளக்கு பூஜை நடைபெற்றது
கமுதி ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;
ராமநாதபுரம் மாவட்டம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கமுதி குண்டாறு கரையில் அந்துள்ள ஸ்ரீசந்தனமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா ஏப்.2 ஆம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் 11 நாள் திருவிழா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு நாள்தோறும் மூலவர் சந்தனமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெற்று வருகிறது. திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியாக 208 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடி, சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபம் ஏற்றி, மலர்களால் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர். திருவிளக்கு பூஜை விழாவில் பங்கேற்ற பெண்கள், பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமுதி மேட்டுத்தெரு இளைஞர் நற்பனி மன்றம் நிர்வாகிகள் செய்தனர்.