ராமநாதபுரம் அமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி
கீழசாக்குளத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைவதற்கு நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு கிராம மக்கள் நன்றி;

ராமநாதபுரம்மாவட்டம்முதுகுளத்தூர் அருகே உள்ள கீழசாக்குளம் கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த மின்னழுத் தம் காரணமாக மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழு தாகி வந்தன. மேலும் இரவு நேரங்களில் குறைந்த மின்ன ழுத்தத்தால் மாணவர்கள் படிக்க முடியாமலும் மின் உயோகப் பொருட்களை பயன்படுத்த முடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் புதிய மின்மாற்றி அமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற மின்சார வாரியம் புதிய டிரான்ஸ்பார் மர் அமைக்க முடிவு செய்து கடந்த அக்டோபர் மாதம் அதற்குரிய மின்கம்பங்கள், தளவாடப் பொருட்கள் உள் ளிட்ட பொருட்களை கீழசாக்குளம் கிராமத்துக்கு கொண்டு வந்தனர். ஆனால் 4 மாதங்கள் ஆகியும் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழ் நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கவ ளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக கீழசாக் குளம் கிராமத்திற்கு புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க மின் சார வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப் பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் புதிய மிள்மாற்றி அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.