ஆலங்குடி அருகே நகரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்துக்கு முன்பு உயர் மின்னழுத்த கம்பி அருந்து விழுந்து கிடைக்கிறது. இதனால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்று கீழே அருந்து கிடக்கும் மின்னழுத்த கம்பியை சரி செய்ய அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
