பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தில் தேனி கண்மாயில் மீன்பிடித் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஜாதி மதம் பாராமல் ஒற்றுமையோடு கன்மாயில் குவிந்தனர். ஊர் முக்கியஸ்தர்களால் வெள்ளை வீசப்பட்டு பின்னர் மீன்பிடி திருவிழா தொடங்கியது. மீன்பிடி உபகரணங்களான கச்சா, பரி, வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து மகிழ்ந்தனர்.
