
பொன்னமராவதி அருகே உள்ள நெருஞ்சிகுடி கார்ணாப்பட்டி விளக்கு ரோடு வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படு வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் காரையூர் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கைவே லிப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (45) என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.