மணமேல்குடி: மணமேல்குடி அருகே அம்மாபட்டினம் வடக்கு தெரு 4வது வார்டுக்கு உட்பட்ட கடற்கரை சாலையில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடி யிருப்புகள் உள்ளன. இங்குள்ள மின்கம்பி தாழ்வாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. பொதுமக்களும் அச்சத்துடனே கடந்து செல் கின்றனர். இதுதொடர்பாக பலமுறை மின்வாரியத் திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாழ்வாக செல்லும் மின்கம்பியை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
