
புதுக்கோட்டை: மகாவீரர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபான கூடங்கள், அனைத்து உரிம கடைகள், பார்கள், ஆகியவற்றுக்கு நாளை (10ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பனை செய்யக்கூடாது. இத்தக வலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.