விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கொடுமுடி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை போலீசார் விசாரணை;

Update: 2025-04-09 04:28 GMT
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
  • whatsapp icon
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா தொட்டிபாளையம், கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கோவிந்தராஜ் கொடிமுடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கோவிந்தராஜ் செல்போனுக்கு அவரது மனைவி போன் செய்துள்ளார். ஆனால் கோவிந்தராஜ் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி உறவினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதை அடுத்து கொடுமுடியில் உள்ள கோவிந்தராஜ் தாய் வீட்டிற்கு உறவினர்கள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது கோவிந்தராஜ் மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கதவை உடைத்துக் கொண்டு உறவினர்கள் உள்ளே சென்ற போது கோவிந்தராஜ் மயக்கத்தில் இருந்து உள்ளார் அவர் அருகே மது பாட்டில் அதன் அருகே எலி பேஸ்ட் மறந்தும் கிடந்தன. இதனால் அவர் மதுவில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவிந்தராஜை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மது பழக்கம், கடன் தொல்லையால் கோவிந்தராஜ் தற்கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. என்னும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News