பேராவூரணியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு;

Update: 2025-04-09 06:19 GMT
பேராவூரணியில் அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு
  • whatsapp icon
பேராவூரணி பெரியார் சிலை அருகில் நகர அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சி.வி.சேகர் தலைமை வகித்தார்.முன்னாள் அமைச்சர், அதிமுக அமைப்பு செயலாளர் வளர்மதி பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி வழங்கி தொடங்கி வைத்தார்.முன்னதாக அதிமுக நகர செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், மாநில எம்ஜிஆர் இளைஞரணி இணைச் செயலாளர் ஜவஹர் பாபு, மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் சாமிநாதன், மாநில இலக்கிய அணி துணைச் செயலாளர் பேராவூரணி திலீபன், மாவட்ட துணை செயலாளர் தவமணி மலையப்பன், திருவோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், பேராவூரணி வடக்கு ஒன்றிய செயலாளர் துரைமாணிக்கம், பேராவூரணி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவி பாக்கியம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் நீலகண்டன், மாவட்ட பிரதிநிதிகள் தெட்சிணாமூர்த்தி, பாண்டியன், பேரூராட்சி கவுன்சிலர் ஆனந்தன், முன்னாள் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் தனபால், ஜெயகோபால், முத்துக்குமார் உள்ளிட்ட நகர, வார்டு, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News