கோணம்பட்டியில் ஐடிஐ கட்டிடம் கட்டும் பணி தீவிரம்

கோணம்பட்டியில் ஐடிஐ கட்டிடம் கட்டும் பணியினை முன்னாள் அமைச்சர் ஆய்வு;

Update: 2025-04-09 06:36 GMT
  • whatsapp icon
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் வட்டத்துக்கு உட்பட்ட தீர்த்தமலை ஒன்றியம் கோணம்பட்டி ஊராட்சியில் அரூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து தமிழக அரசு சார்பில் புதிதாக அரசினர் பல்வகை தொழில் பயிற்சி நிறுவனம் (ITI) கட்டிடம் கட்டும் பணியை இன்று 09.04.2025 கட்டிடம் கட்டும் பணிக்காக இடத்தை முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் தற்போதைய திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் நேரில் பார்வையிட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்,மேலும் நடப்பு நிலவரங்களை அறிந்தார். அரசு அலுவலர்கள் கட்டிடப்பணி விவரங்களை எடுத்துரைத்தனர். மேலும் இந்த நிகழ்வில் அரூர் சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News