ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நடவடிக்கை.

நடவடிக்கை;

Update: 2025-04-23 12:55 GMT
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் நிலத்தை மீட்டு இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நடவடிக்கை. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் மலைமேல் அறம் வளர்த்த தையல் நாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக பெரியகுளம் வடகரை வைத்தியநாதபுரம் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிற்கும் மேலான 25 சென்ட் நிலத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜெயதேவி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் வருவாய் துறையினர் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரமித்து இருந்த நபர்களிடமிருந்து கோவில் நிலத்தை மீட்டு கையகப்படுத்தி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Similar News