சங்கரன்கோவில் அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம்

அரசு நியாயவிலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று வேலை நிறுத்தம் போராட்டம்;

Update: 2025-04-23 12:54 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய தொடர் வேலை நிறுத்தம் ஏப்ரல் 22,23,24 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இதில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலத்தில் வழங்க வேண்டும் எனவும், TNCSC புளூடூத் தராசு முறையை நிறுத்தவும், விரல் ரேகை பதிவு ஆதார் சரிபார்ப்பு 40 சதவீதம் மீண்டும் நடைமுறைபடுத்துதல், பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை வழங்க வேண்டும் என்ற திமுக அரசின் தேர்தல் அறிக்கை உள்ளிட்டவற்றை நிறைவேற்ற கோரி ஒலித்த 30 அம்ச கோரிக்கை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் கவிதா-வை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

Similar News