அம்பாள் நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

அம்பாள் நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது.;

Update: 2025-04-09 07:31 GMT
அம்பாள் நகரில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, ஆண்டாள் கோவில் கிழக்கு, அம்பாள் நகரில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இன்று காலை மங்கள இசை உடன் துவங்கிய கும்பாபிஷேக விழா, விநாயகர் வழிபாடு,புன்யாஹ வாசனம், பிரம்மசுத்தி, நாடி சந்தானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று, கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனை தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது

Similar News