ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேகம்

ஜெயங்கொண்டம் அருகே பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோவில் கும்பாபிஷேகம் ஜல்லிக்கட்டு காளையுடன் வலம் வந்து கருட பகவான் முன்னிலையில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது பக்தி பரவசத்தில் வியந்து தரிசித்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. .;

Update: 2025-04-09 08:58 GMT
அரியலூர், ஏப்.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவாமங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அக்னி வீரன் கோயில் உள்ளது. இக்கோயிலானது,சூழங்குறிச்சி வகையறாக்களுக்கு பாத்தியப்பட்ட அக்னி வீரன் கோயிலானது அரியலூர், ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்களுக்கு எல்லை காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் இருந்து வருகிறது. கேட்கும் வரங்களை அள்ளிக் கொடுக்கும் தெய்வமாக, இக்கோவில் விளங்குவதால், கோவில் கும்பாபிஷேக விழாவை நடத்த ஊர் மக்கள் முன் வந்தனர். அதன்படி விநாயகர், அக்னி வீரன், நொண்டி வீரன், முருகன், தீப்பாச்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கும் சேர்த்து கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 8ந் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கி, தொடர்ந்து கோபூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகசான பூஜைகள் பஞ்சாபிகேஷன் சிவாச்சாரியார் தலைமையில் இறால் சபரி கிரீஸ் சர்மா முன்னிலையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா ஜல்லிக்கட்டு காளையுடன் ஜெண்டை மேளங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மூலம் கடம் புறப்பாடு, மங்கள வாத்தியத்துடன் ஜெண்டை மேளங்கள் முழங்க ஜல்லிக்கட்டு காளையுடன் கோவிலை வலம் வந்து பின்னர், கோவில் ராஜகோபுர விமான கலசத்திற்கு புனித நீரை சிவாச்சிரியார்கள் ஊற்றுவதற்காக எடுத்துச் சென்றனர். அப்போது வானத்தில் கருட பகவான் வட்டமிட்டு கோவிலை சுற்றி வலம் வந்தது. இதனைப் பார்த்த பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பி பரவசத்தில் மூழ்கினர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீரை ஊற்றினர். பின்னர் ஊற்றப்பட்ட புனித நீரை அருகில் இருந்த பக்தர்கள் மீதும் தெளித்தனர். பின்னர் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை டெத் ஸ்ரீ டாக்டர் ரவிராஜ், முன்னாள் டிஎஸ்பி பாண்டியன் உள்ளிட்ட ஊர் நாட்டான்மைகள் முக்கியஸ்தர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் கோவில் திருப்பணி கமிட்டினர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்விழாவில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் வந்திருந்த அனைவருக்கும் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ரவி ராசக்கண்ணு இணைந்து அன்னதானம் மற்றும் குளிர்பானமும் வழங்கி உதவினர். கும்பாபிஷேக விழாவில் திரைப்பட இயக்குனர் செல்வராஜ், திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் மற்றும் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News