மாவட்ட ஆட்சியர் தங்களை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை கேட்கும் வரை தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளால் பரபரப்பு
பரபரப்பு;

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கடமலை - மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக இலவம்பஞ்சு சாகுபடி நடைபெற்று வருகிறது, சுமார் 500 ஹெக்டர் பரப்பரவில் இலவம் பஞ்சு சாகுபடி நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த ஆண்டு இலவம் பஞ்சுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர் கடந்த ஆண்டு ஒரு கிலோ இலவம்பஞ்சு 120 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டில் 30 முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் இலவம்பஞ்சு விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் கூலிக்கு ஆட்கள் வைத்து இலவம்பஞ்சுகளை மரத்தில் இருந்து பறித்து விற்பனை செய்யப்பட்டாலும் கூலியை கூட கொடுக்க முடியாத நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர் விவசாயிகள் என்ற பெயரில் குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே இலவம் பஞ்சுக்கான விலையை நிர்ணயம் செய்யப்படுவதாகவும் கூறும் விவசாயிகள் விலை அதிகரித்தாலும் இருப்பு அதிகம் இருக்கும் போல் காட்டி விலையை குறைப்பதாக குற்றச்சாட்டு தெரிவிக்கும் விவசாயிகள் இதனால் உரிய விலை கிடைக்காமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் இந்நிலையில் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 24 கிராம விவசாயிகளின் சார்பாக இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இலவம் பஞ்சு விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் குறைந்தபட்ச ஆதார விலையாக 100 ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இந்நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் தங்களை சந்தித்து தங்களின் கோரிக்கைகளை கேட்கும் வரை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது