தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து தொடரும் போராட்டம்
போராட்டம்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடமலை - மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட கிராமப் பகுதிகளைச் சேர்ந்த இலவம் பஞ்சு விவசாயிகள் இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இலவம் பஞ்சுக்கு உரிய விலை கிடைக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக கூறி இலவம்பஞ்சுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக 100 ரூபாய் நிர்ணயிக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் தேனி மாவட்ட ஆட்சியர் தங்களை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து நிறைவேற்ற வேண்டுமென கூறி தொடர்ந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் இதனை அடுத்து மாலையில் விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் அருகில் சமையல் எரிவாயு, அடுப்பு ஆகியவற்றை வைத்து சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து எந்த அதிகாரம் தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தாததால் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு சாலையில் அமர்ந்து கொண்டு காத்திருப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் காலை 11 மணி தொடங்கிய போராட்டம் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது, மாவட்ட ஆட்சியர் தங்களை சந்தித்து தங்களது கோரிக்கைகள் குறித்து கேட்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என விவசாயிகள் கூறி வருகின்றனர் இதனால் போலீசார் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிக்கப்பட்டு பரபரப்பாக காணப்படுகிறது