குமரி ஆதித்தமிழர் கட்சி கோரிக்கை

கழிவு நீர் ஓடை கசிவு;

Update: 2025-04-09 11:24 GMT
குமரி ஆதித்தமிழர் கட்சி கோரிக்கை
  • whatsapp icon
குமரி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி  செயலாளர் குமரேசன் விடுத்துள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது :- நாகர்கோவில் மாநகராட்சி செட்டிகுளம் சந்திப்பில் கிட்டதட்ட இரண்டு நாள்களாக கழிவுநீர் ஒடை நிரம்பி சாலையில் வடிந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் தூர்நற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி கழிவுநீர் சாலையில் வடிந்து காணப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மழை நீர் வடிகால் ஓடை சீரமைக்க  கோடி கணக்கில்  செலவிட பட்டுள்ளதாக  அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே இது போன்ற கழிவுநீர் ஒடை சீரமைக்கப்படாமல் காணப்படுகிறது.      முறையாக சீரமைக்கப்பட்டு இருந்தால்  சீரமைக்கப்பட்டதாக கூறும் இது போன்ற கழிவு நீர் ஓடைகளில் இருந்து கழிவு நீர் வெளியே வருமா? கழிவு நீர் ஓடைகளை சுத்தம் செய்யவும், ஓடைகளை சீரமைக்கவும்  மாநகராட்சியில் நிதி பற்றகுறையாக உள்ளதா அவ்வாறு நிதி இல்லை என்றால் எங்கள் அமைப்பின் சார்பாக  நிதி திரட்டி தர தயாராக உள்ளோம். நாங்கள் கேட்பதெல்லாம் பொதுமக்கள் சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் அவர்களின்  அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பது மட்டுமே ஆகும். தொடர்ந்து பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் பல்வேறு பிரச்சனைகளை மாநகராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் மாநகராட்சி ஆணையாளர் மௌனம் காப்பது ஆச்சரியமாகவும் கேள்விக்குறியாகவும் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இது போன்ற பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை விளைவிக்கும் கழிவுநீர் ஓடைகளை முறையாக பராமரித்து சுகாதாரத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என கூறப்பட்டுள்ளது.

Similar News