எடத்துவா புனித ஜார்ஜ் பெருநாள் விழா

ஏப்ரல் 27 - ல் தொடக்கம்;

Update: 2025-04-09 11:30 GMT
  • whatsapp icon
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் எடுத்துவா புனித ஜார்ஜ் தேவாலய நிர்வாகிகள், தக்கலை மறை மாவட்ட குருகுல முதல்வர் தாமஸ் பவுத் பரம்பில் ஆகியோர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:-  கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எடத்துவாவில், செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறும் புனித ஜார்ஜ் பெருநாள் விழா, இந்த ஆண்டு ஏப்ரல் 27 முதல் மே 7 வரை நடைபெறுகிறது. ஐரோப்பிய கோதிக் கட்டிடக்கலை பாணியில் 1810 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம், கேரளாவின் பாரம்பரியக் கலையை பிரதிபலிக்கிறது. புனித ஜார்ஜுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த விழாவில், ஆண்டுதோறும் ஏப்ரல் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 7ம் தேதி வரை நடைபெறும் இதில் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் தமிழகத்திலிருந்து அனைத்து தரப்பு மக்களும் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News