திருப்பத்தூரில் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்க சார்பாக உண்ணாவிரத போராட்டம்
திருப்பத்தூரில் மூன்று அம்ச கோரிக்கை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் சங்க சார்பாக உண்ணாவிரத போராட்டம்;

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பாக மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் ராஜி தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் சிபிஎஸ் சந்தா இறுதித் தொகை வழங்க கோரும் கோப்பு மற்றும் அரசாணை 33ல் உரிய திருத்தம் வெளியிட்டு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க கோரும் கோப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமை செயலகத்தில் நிலுவையாக உள்ளதற்கு விரைவாக ஒப்புதல் வேண்டும் எனவும் கடந்த 2024 ஆம் வருடம் சென்னை எழிலகத்தில் நடைபெற்ற 72 மணி நேரம் உண்ணாவிரத போராட்டத்தில் நான்கு மாதத்தில் தீர்வு வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக ஒத்துக்கொண்ட வருவாய் நிர்வாக ஆணையாளருக்கு நினைவூட்ட வேண்டும் எனவும் அலுவலக உதவியாளருக்கு இணையாக வரையறுக்கப்பட்ட காலமுறைரை ஊதியம் ரூபாய் 15 ஆயிரத்து 700 வழங்க வேண்டும் என்றும் கருத்துக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி கண்டன உரைகள் ஆற்றினர்.