சுகாதார சீர்கேடு சரி செய்ய தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை
காங்கேயத்தில் சுகாதார சீர்கேடு சரி செய்ய தமிழக வெற்றிக் கழகம் கோரிக்கை;
திருப்பூர் கிழக்கு மாவட்டம் காங்கேயம் நகரம் 14 வது வார்டில் உப்பு தண்ணீருடன் சாக்கடை நீர் கலந்து வருகிறது மற்றும் குப்பைகள் ஆங்காங்கே கிடக்கிறது இதனால் அந்த வார்டு மக்களின் உடல் நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இதை வார்டு கவுன்சிலரிடம் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை அதனால் தமிழக வெற்றிக் கழகம் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் யுவராஜ் மகேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வழக்கறிங்கர் அணி யஷ்வந்த் அவர்களின் உதவியுடன், காங்கேயம் நகர செயலாளர் ராகுல் மற்றும் இணைச் செயலாளர் அப்துல் சலாம் அவர்களின் தலைமையில், நகர துணைச் செயலாளர் ஸ்ரீதேவி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சக்தி வடிவேல் அவர்களுடன் நகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. உடன் இருந்தவர்கள் நகர இளைஞர் அணி இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் நகர நிர்வாகிகள் நேரு, அஜித், ராஜ் குமார், ரவிச்சந்திரன்,அக்ஷயா, அருண்குமார், சஞ்சய்.