வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது

கொல்லங்கோடு;

Update: 2025-04-09 11:43 GMT
வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர் கைது
  • whatsapp icon
குமரி எல்லை பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்தவர் சலீம் (65). கருவாடு வியாபாரி. இவர் நேற்று காலை கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் கருவாடு விற்பனை செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் ஏசுதாஸ் (35) என்பவர் கருவாடு வியாபாரி சலீமிடம் 100 ரூபாய் கேட்டுள்ளார். சலீம் சில்லறை இல்லை என்று கூறியுள்ளார். உடனே ஏசுதாஸ், சலீம் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது சம்பந்தமாக சலீம் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏசுதாசை கைது செய்தனர்.

Similar News