ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்.
ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாம்;

கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு செயற்பொறியாளர் குமார் தலைமை வகித்தார். இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு, மின்கட்டண பிரச்சினை, மின் மீட்டர் மாற்றம், தெரு விளக்குகள், உள்ளிட்ட பல்வேறு குறைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். முகாமில் 7 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டன. மீதமுள்ள மனுக்களுக்கு ஒரு வார காலத்துக்குள் நிவர்த்தி செய்து தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.