வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலளி குத்திக்கொலை செய்த வழக்கில் அவரது உறவினரே கைது

வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலளி குத்திக்கொலை செய்த வழக்கில் அவரது உறவினரே கைது;

Update: 2025-04-09 12:00 GMT
வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலளி  குத்திக்கொலை செய்த வழக்கில் அவரது உறவினரே கைது
  • whatsapp icon
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தனியார் பள்ளி காவலளி குத்திக்கொலை செய்த வழக்கில் அவரது உறவினரே கைது.. மனைவியின் சகோதரியுடன் தகாத உறவில் ஈடுப்பட்டு , அவருடன் வாழ அவரது கணவரை கொலை செய்ததது காவல்துறையினர் விசாரணையில் தகவல் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட கரிமாபாத் பகுதியை சேர்ந்தவர் முகமது இஃர்பான் இவருக்கு திருமணம் ஆகி 3 பிள்ளைகள் உள்ள நிலையில், இவரது மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், இந்நிலையில், முகமது இஃர்பான் இக்பால் சாலையில் உள்ள தனியார் நர்ஸரி, பிரைமரி பள்ளியில் காவலாளியாக பணியாற்றி வரும் நிலையில், நேற்று (08) காலை இஃர்பான் மிதிவண்டியில் பணிக்காக பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த போது, பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அணிந்து வந்த மர்மநபர் முகமது இஃர்பானை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். உடனடியாக தகவலறிந்து சென்ற வாணியம்பாடி நகர காவல்துறையினர் முகமது இஃர்பானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அதனை தொடர்ந்து வாணியம்பாடி துணை காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் திருப்பத்தூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு தலைமையிலான காவல்துறையினர் இக்கொலைச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து, முகமது இஃர்பானை கத்தியால் குத்தியது,யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற பல்வேறு கோணங்களில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வந்த நிலையில், முகமது இஃர்பான் மனைவி ஆஜிராவிற்கும், ஆஜிராவின் தங்கை கணவரான திருப்பத்தூர் சின்னகடை தெரு பகுதியை சேர்ந்த சல்மான் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதுகுறித்து முகமது இஃர்பான் சல்மானை பலமுறை கண்டித்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் ஆஜிரா சல்மானுடன் பேசுவதை தவிர்த்துள்ளார், அதனை தொடர்ந்து ஆஜிரா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற நிலையில் இன்னும் சில மாதங்களில், ஆஜிரா ஊர் திரும்ப உள்ள நிலையில், இவரது உறவிற்கு இடையூறாக உள்ள ஆஜிராவின் கணவரான முகமது இஃர்பானை சல்மான் கொலை செய்ய திட்டமிட்டு, நேற்று முகமது இஃர்பானை சல்மான் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் பெங்களூருக்கு தப்பிச்சென்றது தெரியவந்துள்ளது, உடனடியாக திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் பெங்களூர் விரைந்து அங்கு தலைமறைவாக இருந்த சல்மானை கைது செய்து வாணியம்பாடி நகர காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர், அதனை தொடர்ந்து சல்மான் மீது வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News