அரசு மருத்துவமனையில் நாய்கள்- நிர்வாகம் கண்டுகொள்ளுமா?
அரசு மருத்துவமனையில் நாய்கள்- நிர்வாகம் கண்டுகொள்ளுமா?;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் வளாகத்தில் நாய்கள் சுதந்திரமாக உலா வருவதும் ஓய்வெடுப்பதுமாக உள்ளதால் நோயாளிகள் நாய்களை கடந்து செல்ல அச்சம்மடைந்து வருகின்றனர். மேலும் சாப்பிட்ட உணவை ஆங்காங்கே குப்பைத்தொட்டியில் கொட்டுவதால் நாய்கள் அவற்றை உணவு உட்கொள்ள மருத்துவமனையிலேயே சுற்றி வருகின்றன. வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள் நாய்கள் குறுக்கே வருவதால் கடந்து செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். உடனடியாக பேரூ ராட்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உண ர்ந்து நாய்களை பிடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நோயளிகள் மற்றும் சமுக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.