கரூர்-கொலை வழக்கில் தந்தை,மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை - கரூா் நீதிமன்றம் தீர்ப்பு

கரூர்-கொலை வழக்கில் தந்தை,மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை - கரூா் நீதிமன்றம் தீர்ப்பு;

Update: 2025-04-09 14:00 GMT
கரூர்-கொலை வழக்கில் தந்தை,மகன் இருவருக்கும் ஆயுள் தண்டனை - கரூா் நீதிமன்றம் தீர்ப்பு கரூர் மாவட்டம், தோகமலை காவல் நிலைய எல்லைக்கு ஈச்சம்பட்டியில் வசிக்கும் காமா நாய்க்கர், வயது 64, குடும்பத்தினருக்கும், அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் பொம்மாநாய்க்கர், வயது 65 என்பவர் குடும்பத்தினருக்கும் இடையே பூர்வீக நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்துவந்தது. இந்நிலையில் 06.08.21 ஆம் தேதி நாய்க்கர் குளத்துக்கரை அருகில் மேற்படி பொம்மா நாய்க்கரும், அவரது மகன் முத்துசாமியும் அரிவாளாலும், கட்டையாலும் அடித்ததில் காமா நாய்க்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தின்போது உடன் இருந்த சின்னசாமி மற்றும் கிருஷ்ணன் ஆகியோரையும் கொலை செய்ய முயற்சி செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் தோகமலை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் இழைத்த பொம்மா நாய்க்கர் மற்றும் அவரது மகன் முத்துசாமி ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு, 28.10.21-ல் தேதி இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, கரூர் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது. இன்று இவ்வழக்கில், பொம்ம நாயக்கர் மற்றும் அவரது மகன் முத்துச்சாமி ஆகியோருக்கு கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும், ரூ. 5,000/- அபராதமும், கொலை முயற்சி குற்றத்திற்காக தலா 03 மூன்று வருட கடுங்காவல் தண்டனையும், ரூ. 1,000/- அபராதமும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக தலா ஒரு வருட சிறை தண்டனையும், ரூ. 500/- அபராதமும் விதித்து, இத்தண்டணையை ஏக காலத்தில் அனுபவிக்க கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முக சுந்தரம் தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிகள் இருவரையும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டணை பெற்றுதந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அப்துல்லா பாராட்டினார்.

Similar News