
மலையூர் கடைவீதியில் உள்ள அரசு மதுபான கடை எண் 6608 ஐ அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளித்தனர். கடந்த வாரம் மதுக்கடை முன்பு இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்பாக குற்ற சம்பவங்கள் நடப்பதை தவிர்க்க மதுபான கடை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.