வேலூர்: மோட்டார் மூலம் கழிவுநீர் வெளியேற்றம்!
வேலூரில் சுகாதார அலுவலர் உத்தரவின் பேரில் மோட்டார் மூலம் இன்று கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.;

வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்துக்குட்பட்ட 34ஆவது வார்டு ஜெயராம் தெருவில் ஜாமி அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் என்ற அரபிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி எதிரில் உள்ள கால்வாய் பள்ளமாக உள்ளதால் அடிக்கடி கழிவுநீர் தேக்கம் ஏற்படுகிறது. இந்நிலையில் மண்டல குழுத் தலைவர் நரேந்திரன் அறிவுறுத்தலின் பேரில், சுகாதார அலுவலர் உத்தரவின் பேரில் மோட்டார் மூலம் இன்று கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.