நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருவதையொட்டி இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றத
இதனால் அவ்வழியே செல்லும் வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது...;
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருவதையொட்டி இன்று பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது இதனால் அவ்வழியே செல்லும் வாகன போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது... நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெல்லிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளமத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகையையொட்டி ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் போரினால் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார் இதனைத் தொடர்ந்து ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் இன்று ராணுவ பயிற்சி கல்லூரி வளாகத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் கலந்து கொண்டு ஒத்திகையினை நடத்தினர் ராஜ்நாத் சிங் வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.