திமுக மேற்கு ஒன்றிய கழக பொதுக்குழு கூட்டம்

செந்தில் நகர் பகுதியில் தர்மபுரி மேற்கு ஒன்றிய கழக பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது;

Update: 2025-04-10 00:49 GMT
  • whatsapp icon
தர்மபுரி மேற்கு ஒன்றிய கழக பொதுக்குழு கூட்டம் செந்தில் நகர் வின்சன்ட் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் வைத்தார் மாவட்ட பிரதிநிதி புஸ்வராஜ் வரவேற்புரையாற்றினார் தர்மபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் காவேரி முன்னிலை வகித்தார். சிறப்புரையாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் துரைசாமி, மாவட்ட மகாராணி, முத்துலட்சுமி, தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மணி சிறப்புரையாற்றினார். அப்போது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கடுமையாக பணியாற்ற வேண்டும். அப்போதுதான் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை திமுக கைப்பற்றும் அதே போன்று தமிழக அரசின் சாதனைகள் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களிடையே பட்டி தொட்டி எல்லாம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் அப்போதுதான் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடியும். தர்மபுரி மாவட்டத்தில் புதிய இளைஞர்கள் உறுப்பினர் சேர்க்கை சேர்க்க வேண்டும் அதேபோல் மகளிர் அணி பொறுப்பாளர்கள் புதிய மகளிர்கள் உறுப்பினர் சேர்க்க வேண்டும் புதிய இளைஞர்களுக்கு கட்சிகள் பொறுப்புகள் வழங்கப்படும். அப்போது கட்சியின் பணிகள் வேகமாக சிறப்பாக நடைபெறும் என்று தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் மணி பேசினார் இந்த நிகழ்ச்சியில் மாணவரணி துணை அமைப்பாளர் கௌதம் மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் வினோத்குமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கௌதம் .உதயசூரியன். நகர்மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News