போச்சம்பள்ளி அருகே மாணவி மாயம் – பெற்றோர் போலீசில் புகார்.

போச்சம்பள்ளி அருகே மாணவி மாயம் – பெற்றோர் போலீசில் புகார்.;

Update: 2025-04-10 01:44 GMT
போச்சம்பள்ளி அருகே மாணவி மாயம் – பெற்றோர் போலீசில் புகார்.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சந்தூரை சேர்ந்தவர் 19 வயது மாணவி இவர் கந்திகுப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் முதலாமாண்டு பி.சி.ஏ., படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன் தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் இல்லாததால் இது குறித்து மாணவியின் பெற்றோர் போச்சம்பள்ளிகாவல் நிலையத்தில் போலீசில் புகார் கொடுத்தனர். அதில் போச்சம்பள்ளி அடுத்துள்ள வெப்பாலம்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி வெங்கடேசன்(24) என்பவர் மீது எங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News