
கிருஷ்ணகிரி மவட்டம் அஞ்செட்டி அருகே சீங்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்னர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் அனுமதி சீட்டு இல்லாமல் இரண்டு யூனிட் எம்.சாண்ட் மண்ணை தேன்கனிக்கோட்டை பகுதியில் இருந்து அஞ்செட்டிக்கு கொண்டு வருவது தெரியவந்தது இதையெடுத்து லாரியை பறிமுதல் செய்து அஞ்செட்டி காவல் நியைத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு லாரி டிரைவர், உரிமையாளரை தேடி வருகின்றனர்.