கரித் தொட்டி ஆலைக்கு எதிராக விவசாயிகள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு

கரித் தொட்டி ஆலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் வாபஸ் பேச்சுவார்த்தையில் உடன்பாடு;

Update: 2025-04-10 06:29 GMT
மூலனூர் அருகே வளையக்காரன்வலசு கிராமத்தில் புதிதாக அமைக்க உள்ள தனியார் தேங்காய் கரித்தொட்டி ஆலையை எதிர்த்து கிராமமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று மூலனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தாசில்தார் முன்னிலையில் ஆலை நிறுவன உரிமையாளர் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில் ஆலை அமைவதன் மூலம் நிலத்தடி நீர் மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை விவசாயிகள் எடுத்துரைத்தனர். இதையடுத்து பேச்சுவார்த்தை முடிவில் ஆலை அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை நிறுத்தி வைக்கப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார்.அதைத் தொடர்ந்து விவசாயிகள் அறிவித்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.

Similar News