பல்லடம் கோயிலில் போதையில் ரகளை செய்த பெண்.

பல்லடம் கோயிலில் போதையில் ரகளை செய்த பெண். பலமுறை அழைத்தும் வராத போலீசாரை சாலை மறியல் செய்து வரவழைத்த பொதுமக்கள்.;

Update: 2025-04-10 06:41 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே உள்ள விநாயகர் கோயிலுக்கு மாலையில் காவி உடையுடன் வந்த பெண் கோயிலின் உள்ளே சென்று புகைப்பிடித்துள்ளார். இதனையடுத்து அதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் நீங்கள் யார் எதற்கு கோயிலில் புகைபிடிக்கிறீர்கள் என கேட்டதற்கு பொதுமக்களிடம் மிகுந்த ஆக்ரோஷமாக நடந்து கொண்டு சாபம் விட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.‌ பின்னர் பொதுமக்களிடம் பால், தயிர் சிகிரெட் வேணும் கேட்டார். இதனையடுத்து பொதுமக்கள் அவருக்கு அதனை வாங்கி கொடுத்து கோயிலை விட்டு வெளியே அனுப்ப முயற்சி செய்தனர் . அதனை பெற்றுக்கொண்ட பெண்மணி கோயிலில் அசுத்தம் செய்தார். இதனையடுத்து இதுகுறித்து பொதுமக்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்து மேலாகியும் போலீசார் வராமல் காலம் தாழ்த்தி வந்ததால் அப்பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பல்லடம் திருப்பூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் கஞ்சா போதையில் அட்டாரா சிட்டியில் ஈடுபட்ட பெண்ணை காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு பலமுறை அழைத்தும் வராததால் இந்த பெண்மணி அட்டரா சிட்டியில் ஈடுபட்டு வருகிறார். நாளை எங்க பகுதியில் வேற ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடந்தால் போலீசார் வரவில்லை என்றால் எங்க நிலை என்ன என்று தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Similar News