தேவையில்லாததை நம்ம மேல தினித்து நம்மையெல்லாம் அடிமையாக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்ற சாட்டு

தேவையில்லாததை நம்ம மேல தினித்து நம்மையெல்லாம் அடிமையாக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் குற்றம் சாட்டினார்.;

Update: 2025-04-10 07:22 GMT
அரியலூர், ஏப்.10- அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்  தா.பழூர் மேற்கு ஒன்றிய  பொறுப்பாளர் தனவேல் தலைமையில் நடைபெற்றது. தலைமை கழக பேச்சாளர் தூத்துக்குடி சரத் பாலா, இளம் பேச்சாளர் தனிமரக்காடு சம்பத்குமார், தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ் எஸ் சிவசங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றி பேசும்போது நமது முதலமைச்சர் வாழ்ந்தால் நாடு வாழும் மொழி வாழும் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என்பதற்காக கொண்டாடுகிறோம்  பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை  முதலமைச்சர் கொடுத்துக் கொண்டிருக்கிறார் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது மகளிர் உரிமைத்தொகை, மகளிர்க்காண விடியல் பயணம் ஆகிய திட்டங்களால் மகளிர் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது யாரையும் எதிர்பார்க்காமல் பெண்கள் தைரியமாக இருக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது இப்படிப்பட்ட திட்டம் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். கிராமங்களில் உள்ள மக்களுக்கு குறைந்தபட்ச அளவிற்காவது வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கொண்டுவரப்பட்ட திட்டம் தான் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இந்த திட்டத்திற்கான சம்பளத்தை தராமல் மோடி ஏமாற்றி வருகிறார் அதற்காக தான் கடந்த வாரம் கூட திமுக சார்பில்  போராட்டம் நடைபெறுகிறது 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பளம் வழங்குவதற்காக கொடுக்க வேண்டிய 4000 கோடி ரூபாய் தமிழகத்திற்கு தரவேண்டிய பணத்தை மோடி தராமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் இது மட்டுமா நமது பள்ளிக்கூடத்திற்கு எல்லாம் மோடி அரசாங்கம் 2000 கோடி கொடுக்க வேண்டும் அந்த பணத்தையும் கொடுக்காமல் உள்ளார் ஏன் என்று கேட்டால் மூன்று மொழி படிக்க வேண்டும் என்கிறான் நாம் தற்பொழுது படித்து வரும் தமிழ் ஆங்கிலத்துடன் இந்தியையும் படிக்க வேண்டும் என வற்புறுத்துகிறார் நமது பிள்ளைகள் ஆங்கிலம் படிக்கவே சிரமப்படுகிறது மகளிர் உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக நமது முதலமைச்சரால் புதுமைப்பெண் திட்டம் கொண்டுவரப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது இத்திட்டம் தொடங்கப்பட்டு மூன்று வருடங்களான நிலையில்  52 சதவீதமாக இருந்த மகளிர் உயர் கல்வி தற்போது 85 சதவீதமாக உயர்ந்துள்ளது அதேபோல்  மாணவர்களும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக தமிழ் புதல்வன் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது இன்னும் ஐந்து வருடங்களில் எந்த வீட்டிற்கு போய்  பெண் குழந்தைகளை  கேட்டாலும் நான் கல்லூரி போய் படிக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு உன்னத திட்டத்தை கொண்டு வந்துள்ளார் நமது முதலமைச்சர். படித்தால்தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிறார் நமது முதலமைச்சர். ஆனால் மோடி கம்பெனி நம்ம படிக்கக் கூடாது என்று தான் இந்தியை கொண்டு வரான். மோடி கிட்ட நிர்மலா சீதாராமனு ஒரு அமைச்சர் இருக்கிறார் அவர் பாராளுமன்றத்தில் தமிழ் படித்து என்ன பண்ணுவீர்கள் பிச்சை எடுக்க தான் போகலாம் என்கிறது நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்க வந்தோமா. தமிழ்நாட்டில் வசூல் பண்ணுகிற வரிப்பணத்தை திருடி தின்னு விட்டு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய பங்கை நமக்கு கொடுக்காமல் இந்தி பேசுகிற மாநிலத்திற்கு கொடுத்துவிட்டு நம்மை பார்த்து திமிர் கொண்டு அந்த வார்த்தையை அந்த அம்மா பேசுகிறது இந்தி படித்தால் டெல்லிக்கு போகலாம் என்கிறது ஒரு கூட்டம். ஒரு சினிமாவில் சொல்லுவான் நாடு ராத்திரியில் நான் எதற்கு சுடுகாட்டிற்கு போக வேண்டும் என்று வரும் அதேபோல் நாம்  எதற்கு வடநாட்டிற்கு போக வேண்டிய தேவை இருக்கு. அதனால தான் நாங்க சொல்கிறோம் இந்தி படிக்க மாட்டோம் தமிழ் போதும் ஆங்கிலம் போதும் ஆங்கிலம் படித்துவிட்டு வெளிநாட்டிற்கு வேண்டுமென்றால் வேலைக்கு போய்க்கிறோம். வட இந்தியாவிற்கு நாங்கள் வேலைக்கு வரல. இப்படி தேவையில்லாததை நம்ம மேல தினித்து நம்மையெல்லாம் அடிமையாக்க வேண்டும் என்பதுதான் மோடியின் எண்ணம் அந்த மோடியை எதிர்த்துதான் தமது முதலமைச்சர் போராடிக் கொண்டிருக்கிறார் எனவே அவருடைய ஆட்சி தொடர வேண்டும் நமது தமிழ்நாடு காப்பாற்றப்பட வேண்டும் மோடி கம்பெனி வீட்டிற்கு அனுப்ப வேண்டும் அதற்கு நாம் எப்போதும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என பேசினார். கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என  ஏராளமானோர் கலந்து கொண்டனர் .

Similar News