பாசன வாய்க்கால் தூர் வாரும் பணி தொடங்கி வைத்த எம் எல் ஏ
ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் பாசன வாய்க்கால் பணியை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;
அரியலூர், ஏப்.10- ஜெயங்கொண்டம் அருகே* *ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து தா.பழூர் அருகே உள்ள அருள்மொழி கிராமத்தில் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் பிரதான பொன்னாறு வாய்க்கால் மற்றும் காரைக்குறிச்சி கிராமத்தில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் சித்தமல்லி நீர்த்தேக்க உபரிநீர் வடிகால் ஓடை என ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகளை ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் இன்று தொடங்கி வைத்தார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தூர் வாரும் பணிகளை உடனே தொடங்கிய தமிழக அரசுக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும், அப்பகுதி விவசாயிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.