பழையூரில் காதல் திருமணம் செய்த மனைவி மாயம். மனைவியை காணவில்லை கணவன் புகார்.
பழையூரில் காதல் திருமணம் செய்த மனைவி மாயம். மனைவியை காணவில்லை கணவன் புகார்.;
பழையூரில் காதல் திருமணம் செய்த மனைவி மாயம். மனைவியை காணவில்லை கணவன் புகார். கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, நெரூர் அருகே உள்ள பாழையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயவீரன். இவரது மனைவி அந்தோணி மேரி வயது 26. இவர்கள் இருவரும் 8- ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக ஏப்ரல் 6-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற அந்தோணி மேரி வீடு திரும்பவில்லை. அந்தோணி மேரி அவரது பெற்றோர் வீட்டுக்கும் செல்லவில்லை. இதனால் வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், அவரது தோழியரிடம் விசாரித்தும், உறவினர்கள் வீட்டில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்காததால் தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாயமான அந்தோணி மேரியை தேடி வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.