வளர்ச்சி அடைந்த சமுதாயமாக வன்னியர் சமுதாயம் வரவேண்டும் என்பதற்காக பாமக தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பூ.தா.அருள்மொழி

இந்த நாட்டிலே வளர்ச்சி அடைந்த சமுதாயமாக இந்த வன்னியர் சமுதாயம் வரவேண்டும் என்பதற்காக தான் இந்த மாற்றம் - சண்டை கிடையாது கோஷ்டி கிடையாது வன்னியர்கள் எல்லோரும் ஒரே கோஷ்டி தான் என  பாமக தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் பூ.தா.அருள்மொழி கூறினார்.;

Update: 2025-04-10 12:12 GMT
அரியலூர், ஏப்.10- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு குறித்து அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைந்த மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம்   அரியலூர் மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா அருள்மொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில வன்னியர் சங்க தலைவர் பூ.தா. அருள்மொழி எங்களுடைய நிரந்தரமான தலைவர் மருத்துவர் ஐயா தான் 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கிய காலத்தில் இருந்து நிறுவனத் தலைவர் என்ற பெயரோடு எங்களை வழி நடத்தியவர். அவர் எப்போது யாரை வேண்டுமானாலும் மாற்றி அறிவிக்க அவருக்கு உரிமை உண்டு நான் இப்போ வன்னியர் சங்க தலைவரா இருக்கிறேன் இவரை நீக்கிவிட்டு வேறு ஒருவரை போடுங்கள் என்று சொல்ல அவருக்கு உரிமை உண்டு அந்த அடிப்படையில் தான் இதுவரையில் சங்கம் நடந்து வருகிறது. இந்த 86 வயதிலேயே மருத்துவர் ராமதாஸ் என்ன எதிர்பார்க்கிறார் என்றால் என்றால் இந்த நாட்டிலே வளர்ச்சி அடைந்த சமுதாயமாக இந்த வன்னியர் சமுதாயம் வரவேண்டும் எல்லோரும்  சம்பாதிக்க கூடியவனாக இருக்க வேண்டும் எல்லா வீட்டிலும் கார் நிற்க்க வேண்டும் என்று விரும்புகிறார் அந்த மாற்றத்தை கொண்டு வருவதற்கு அவரும் சேர்ந்து உழைக்க ஆசைப்படுகிறார் அதனாலதான் இந்த மாற்றம் இதில் ஒன்றும் சண்டை கிடையாது கோஷ்டி கிடையாது வன்னியர்கள் எல்லோரும் ஒரே கோஷ்டி தான் என கூறினார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திற்கு மாநாடு பொறுப்பாளர்களான தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஸ்டீல் சதாசிவம், தஞ்சை மு.மாவட்ட செயலாளர் ஜோதிராஜ், மாநாட்டு நகர பொறுப்பாளர் மாதவன்தேவா உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சித்திரை முழு நிலவு மாநாட்டில் அதிகப்படியான வாகனங்களை ஒன்றிய செயலாளர் நகரச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மக்களை திரட்டி வந்து கூட்டத்தை காட்டுபவருக்கு தங்க மோதிரம் பரிசு வழங்குவதாக மாவட்ட செயலாளர் தமிழ்மறவன் அறிவித்தவுடன், கோஷ்டி பூசல் இல்லாமல் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையோடு செயல்பட்டு மாநாட்டை சிறப்பிக்க கேட்டுக்கொண்டார்.முடிவில் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.

Similar News